புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தனிநபர் இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், ரிசார்டுகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தால், அதில் பங்கேற்கும் நபர்களின் தடுப்பூசி சான்றிதழின் நகல்பெற்று வைத்திருக்க வேண்டும் எனவும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை அவசியம் எடுத்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை காவல்துறையின் மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.