புதுச்சேரியின் போக்குவரத்துத் துறை அமைச்சரான சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு கொடுத்துள்ளார். அத்துடன் ராஜினாமாக தொடர்பாக மக்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகம் அல்ல. ஆனால், தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மக்கள் செல்வாக்கு மூலம் சட்டமன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீடிக்கலாம். இதற்கு பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து, நானும்களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு இரவு பலாக ஓடி ஓடி உழைத்தேன். இறுதியில் எந்த பயனும் இல்லை என்று எழுதியுள்ளார். விவரம் கீழே உள்ள காணொளியில்