புதுச்சேரி விடுதலை நாள் விழா - அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை!

புதுச்சேரி விடுதலை நாள் விழாவினை முன்னிட்டு காரைக்கால் காமராஜர் அரசு அலுவலக கட்டடத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை
தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கைpt desk
Published on

செய்தியாளர்: அப்துல் அலீம்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் காமராஜர் அரசு வளாக கட்டடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

Collector
Collectorpt desk

வழக்கமாக அதிகாரிகள் கொடி ஏற்றும் நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களது உத்தரவின் பேரில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பூமிகா என்ற திருநங்கை, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் கலந்து கொண்டு திருநங்கை பூமிகாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை
காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன? சவால்கள் என்ன? - ஆசிரியர் சீனிவாசன் விளக்கம்

மேலும் திருநங்கை பூமிகா, தங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்த காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக அரசு கட்டடத்தில் திருநங்கை ஒருவர் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு திருநங்கையினர் சமுதாயத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com