புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மக்கள் கருத்தை கேட்டுத்தான் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
புதுச்சேரியில் சித்த மருத்துவ சார்பில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத கல்வி கொள்கை, புதிய கல்வி கொள்கையால் புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்டுத்தான் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பாதிப்புள்ள தற்போதைய சூழலில் மாணவர் கல்வி பயில மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு மாநில அரசுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.