மாஸ்க், வெப்பநிலை மானியை வாங்கி குவிக்கும் மக்கள்.. பற்றாக்குறையால் அவதிப்படும் மருத்துவர்

மாஸ்க், வெப்பநிலை மானியை வாங்கி குவிக்கும் மக்கள்.. பற்றாக்குறையால் அவதிப்படும் மருத்துவர்
மாஸ்க், வெப்பநிலை மானியை வாங்கி குவிக்கும் மக்கள்.. பற்றாக்குறையால் அவதிப்படும் மருத்துவர்
Published on

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பயன்படுத்தும் முகக்கவசம், வெப்பநிலை மானி ஆகியவற்றின் அவசியத்தை மக்கள் உணரவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நாடுகளின் அரசுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் மக்கள் கூடுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் மக்களை கூட முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் மக்களின் தலையில் வெப்பநிலை மானி வைத்து, அதன் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த உபகரணங்களின் தேவை குறித்து மக்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

முன்பெல்லாம், பாதரசம் இருக்கும் வெப்பநிலை மானிகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் டிஜிட்டல் வெப்பநிலை மானிகள் வந்தன. தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உடலின் மேற்பகுதியில் வைத்து பரிசோதிக்கும் துப்பாக்கி போன்ற வெப்பநிலை மானி வந்துவிட்டது. ஆனால் இவற்றின் முக்கியத்துவத்தை சாதாரண மக்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த துப்பாக்கி வடிவ வெப்பநிலை மானிகள் துல்லியமாகவும், தூசிகள் பரவமால் நன்றாகவும் செயல்படுவதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதுதவிர கின்சா போன்ற செயலிகளும் வெப்பநிலை மானியுடன் இணைத்து பயன்படுத்தப்படுகின்றன.

இதேபோன்று முகக்கவசங்களை அணிவதன் தேவை குறித்து மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கவில்லை எனப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் அறிவுறைப்படி உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு நபர் முகக்கவசம் அணியத்தேவையில்லை எனப்படுகிறது. ஏனென்றால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு நபரின் நாசித்துளிகள் மற்றொருவர் மீது படுவதால் கொரோனா பரவாது எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் முகக்கவசங்கள் அணியவில்லை என்றால், அது உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உபயோகப்படும். அதனால் முகக்கவசங்களின் பற்றாக்குறையும் தீரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

அத்துடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்களுக்கு அவை மிகவும் உதவும். இதற்கிடையே இந்தியாவின் பல நகரங்களில் முகக்கவசங்கள் அணியாமல் வருபவர்களை காவலர்கள் பிடிப்பது வழக்கமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com