மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களை கண்டித்து கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் அங்கு பாரதிய ஜனதா கட்சியினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாரதிய ஜனதாகட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ,கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை முன்பு அக்கட்சி சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்குலி ஆகியோருடன், திரளான தொண்டர்களுடன் பங்கேற்றனர். இவர்களை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.