சபரிமலையில் தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு

சபரிமலையில் தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு
சபரிமலையில் தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு
Published on

சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது..

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்ட ம் வலுத்து வருகிறது. இதனால் சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நிலக்கல், பம்பை, பத்தினம்திட்டா, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 

இந் நிலையில் சபரிமலையில் நவம்பர் 16- ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் இதை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com