டெல்லி ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு - காவல்துறை குவிப்பு

டெல்லி ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு - காவல்துறை குவிப்பு
டெல்லி ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு - காவல்துறை குவிப்பு
Published on

தென்கிழக்கு டெல்லியின் ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று இறந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு டெல்லியின் ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜாமியா மிலியா இஸ்லாமியாவுக்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மற்றும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுப்பதே எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com