’ஆபரேஷன் புளுஸ்டார்’ நினைவு தினம்: பொற்கோவிலில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்!

’ஆபரேஷன் புளுஸ்டார்’ நினைவு தினம்: பொற்கோவிலில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்!
’ஆபரேஷன் புளுஸ்டார்’ நினைவு தினம்: பொற்கோவிலில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்!
Published on

பஞ்சாப் பொற்கோவிலில் நடந்த ' ஆபரேஷன் புளுஸ்டார் ' நடவடிக்கையின், 35 வது ஆண்டு கடைபிடிக்கப்படுவதை அடுத்து, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ் பொற்கோவிலில் பதுங்கியிருந்த காலிஸ்தான் பிரிவினை வாதிகளை பிடிப்பதற்காக, 03.06.1984 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'ஆபரேஷன் புளூஸ்டார்' (Operation Blue Star) என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த ஆபரேஷனில் பிரிவினைவாதிகள் மற்றும் பொதுமக்கள் 1,592 பேர் உயிரிழந்தனர். 

இதன் 35 வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  இதையொட்டி பொற்கோவிலில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமிர்தசரஸ் பகுதியில் கூர்மையான ஆயுதங்கள் உட்பட எந்த விதமான ஆயுதங்களும் கொண்டு செல்ல இன்னும் ஐந்து நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொற்கோவில் வளாகத்துக்குள். காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை சிலர் எழுப்பினர். இந்தியாவுக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் இன்று காலை எழுப்பியுள்ளனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com