பிரியங்காவின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - யோகி ஆதித்யநாத்

பிரியங்காவின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - யோகி ஆதித்யநாத்
பிரியங்காவின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - யோகி ஆதித்யநாத்
Published on

பிரியங்காவின் அரசியல் பிரவேசம், பாஜகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். 

இதையடுத்து பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஒருவழியாக அரசியலில் நுழைந்தார் பிரியங்கா. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேசம் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பதவி பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிரியங்காவின் அரசியல் பிரவேசம், பாஜகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்திக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கியிருப்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம் எனவும் இதற்கு முன்புகூட பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பரப்புரை செய்துள்ளார் எனவும் தெரிவித்தார். அதனால் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் பாஜகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டார்.

மேலும் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணி பிரச்சனைகள் நிரம்பிய கூட்டணி எனவும் அங்கு தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் அந்த கூட்டணி ஒன்றுமே இல்லை என விமர்சித்தார். நாட்டை யார் பாதுகாப்பார்களோ அவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எனவும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com