அண்ணனின் சாதனையை முறியடித்த தங்கை... கூட்டணிக் கட்சியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த வயநாடு!

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 3.82 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியங்கா காந்திகோப்புப்படம்
Published on

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்தது வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தல். காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகள் பரப்புரையில் ஈடுபட்டிருந்தாலும், முதல்முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி - ராகுல் காந்தி
பிரியங்கா காந்தி - ராகுல் காந்திகோப்புப்படம்

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி முதல்முறையாக அந்த தொகுதியில் போட்டியிட்டார். அப்போது பதிவான மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 65% வாக்குகளை ராகுல் காந்தி மட்டுமே வாங்கி 4.30 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி வெற்றி பெற்றிருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் (2024) வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றிருந்தார். அப்போதும் கிட்டத்தட்ட 60% வாக்குகளைப் பெற்று 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
INDvsAUS | மிரட்டிய இந்திய பௌலர்கள்... ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா 5 விக்கெட்டுகள்!

இத்தகைய சூழலில்தான் ராகுல் ரேபரேலி மக்களவை உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு, வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து நடந்த இடைத்தேர்தலில்தான் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். தொடக்கம் முதலே களம் பிரியங்கா காந்திக்கு ஆதரவான களமாக மட்டுமே இருந்தது. ராகுலும் பிரியங்காவும் களத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கூட, “ராகுல்காந்தி பெற்ற வாக்குகளை விட பிரியங்கா காந்தி அதிகமான வாக்குகளைப் பெறுவார்” என தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் தனது முதல் தேர்தலிலேயே பகல் 1 மணி நிலவரப்படி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட வெற்றியும் உறுதியாகிவிட்டது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் வெற்றிக்கு கிடைத்த பெற்ற வாக்கு வித்தியாசத்தையும் கடந்துவிட்டார் பிரியங்கா காந்தி. தற்போது பிரியங்கா காந்தி 3.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராபர்ட் வதேரா, “பிரியங்கா காந்தியின் உழைப்புகளை கண்டுகொண்ட வயநாடு மக்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை | பாஜக முன்னிலை.. “இது எப்படி சாத்தியம்?” - சஞ்சய் ராவத் கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com