டெல்லியில்ஆக்சிஜன் பற்றாக்குறையால் தனியார் மருத்துவமனை ஒன்று மூடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள வேல்ர்ட் பிரைன் சென்ட்டர் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆக்சிஜன் கிடைக்க 18 முதல் 30 மணிநேரத்திற்கு மேல் ஆவதால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்து.
ஆக்சிஜனை ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், ஆக்சிஜன் கொண்டுவரும் லாரிகள் நிறுத்தப்படுவதாலும், உரிய ஒத்துழைப்பின்மையாலும் ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.