'நீங்க ஆபாச சேட் செஞ்சிருக்கீங்க! அதனால்..'- போன் காலில் மோசடி வலை.. சிக்காமல் எஸ்கேப் ஆன கேரள நபர்!

சமீப காலங்களில் ஆன்லைன் மூலம் நிதி மோசடியானது அதிகரித்து வருகிறது. மொபைலின் உபயோகம் தெரியாத சிலர் ஆன்லைனில் பணத்தை இழந்ததுடன், உடனடியாக வங்கிகளிடம் இது குறித்து புகார் தெரிவிக்காமலும் இருந்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி கும்பல்
ஆன்லைன் மோசடி கும்பல்pt web
Published on

சமீப காலங்களில் ஆன்லைன் மூலம் நிதி மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததுடன், உடனடியாக வங்கிகளிடம் இது குறித்து புகார் தெரிவிக்காமலும் இருந்து வருகின்றனர். otp எண் மற்றும் ஆதார் குறித்த விவரங்களை தெரியாதவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என்று வங்கிகள் அறிவுறுத்தி வந்தாலும், ஆங்காங்கே மோசடி பேர்வழிகள் பலர் மக்களை ஏமாற்றி பணத்தை திருடத்தான் செய்கின்றனர். இதே போல் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா ஒட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவரின் மொபைலுக்கு கடந்தவாரம் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம், ’நாங்கள் சைபர் கிரைமிலிருந்து பேசுகிறோம், நீங்கள் தடை செய்யப்பட்ட ஆபாச வலைதளங்களில் சாட் செய்து வந்துள்ளீர்கள். இது சட்டப்படி குற்றம்.. ஆகையால் நீங்கள் சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்’ என்று மிரட்டி பேசியுள்ளார் அந்த மர்ம நபர். இதில் பயந்த அந்த ஊழியர், போலிசாரை அணுகி இருக்கிறார். போலிசாரும் அந்த எண்ணை மீண்டும் அழைக்கும் பொழுது அது அணைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் கால் செய்யவேண்டாம் மெசேஜ் செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. போலிசாரும் அந்த எண்ணிற்கு செய்தியை அனுப்பவும், அவர்கள் ஊழியரின் வங்கி கணக்கு குறித்த செய்திகளை கேட்டுள்ளனர். இது மோசடி கும்பல் ஆகவே தகவல்களை பரிமார வேண்டாம் என்று போலிசார் கூறவே ஊழியர் தனது தகல்களை பரிமாறவில்லை.. இதனால் போலிசாரின் தலையீட்டால் அந்த ஊழியரின் பணமானது காப்பாற்றப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க... இதே ஒட்டப்பாலத்தில் கடந்தவாரம் மோசடி கும்பல் 40 லட்சம் ரூபாய் வரை மக்களை ஏமாற்றி பணம் பறித்தசெய்தி வெளிவந்தது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com