சூட்டிங் ஸ்பாட்டில் துணை நடிகைக்கு நடந்த அத்துமீறல் சம்பவம் - பிரித்விராஜ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்த பிரச்சனைத் தொடர்பாக கடந்த சில நாட்களாக மவுனம் காத்துவந்த நடிகர் மோகன்லால், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மோகன்லால் ப்ரித்விராஜ்
மோகன்லால் ப்ரித்விராஜ்கூகுள்
Published on

மௌனம் கலைந்த மோகன்லால்

கேரள மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் AMMA. இந்த அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் மற்றும் செயலாளராக நடிகர் சித்திக் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் பாலியல் புகாரை அடுத்து கேரள அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஹேமா கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு நடிகைகளின் பாலியல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. கடந்த வாரம் அதன் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை வெளிவந்த நிலையில், கேரள திரைப்பட நடிகர் சித்திக், திரைப்பட நடிகரும் கொல்லம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் உட்பட பல பிரமுகர்கள் மீது பெண் நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார்களை கேரள ஊடகங்கள் வழியாக வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கேரளா நடிகர் சங்கத்திலிருந்து, அனைவரும் கூண்டோடு பதவி விலகினர்.

இந்த பிரச்சனைக்கு நடிகைகள் சார்பாக முதலில் குரல் கொடுத்தவர் நடிகர் ப்ரித்விராஜ்.

ஹைதராபாத்தில் ப்ரித்விராஜ் நடித்த ப்ரோ டாடி படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவமானது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில் துணை நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலால் துணை இயக்குநரை தனது படத்திலிருந்து ப்ரித்திவிராஜ் நீக்கியச்செய்தி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது

ப்ரோ டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்துக்கொண்டிருந்த சமயம், திருமண காட்சி ஒன்றை படம் பிடிக்க வேண்டியிருந்ததால் , மளையாள திரைப்பட சங்கத்தின் மூலம் துணை நடிகை ஒருவர் நடிக்க ஒப்புக்கொண்டு ஹைதராபாத் வந்துள்ளார்.

அவ்வாறு வந்த துனை நடிகையை, இந்தப்படத்தின் உதவி இயக்குநர் மன்சூர் ரஷீத் தனது அறைக்கு வரவழைத்து அவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்துக்கொண்டுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தவிரவும், நடிகையை நிர்வாணகோலத்தில் படம் பிடித்து அவரை மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளார். இந்த சம்பவம் தெரிந்ததும் பிருத்விராஜ் துணை இயக்குநர் மன்சூர் ரஷீத்தை அப்படத்திலிருந்து நீக்கி, இது குறித்து போலிஸில் புகார் அளிக்கவும் இயக்குநரிடம் பரிந்துரைத்துள்ளார்.

இச்சம்பவம் வழக்கு பதிவானதும் இணை இயக்குநரைத் தேடி ஹைதராபாத் போலிசார் கேரளா சென்றுள்ளனர். அங்கு இணை இயக்குநர் தலைமறைவாகியதுடன், அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கால் இந்த வழக்கை நீர்பூர்க்கவும் செய்து இருக்கிறார்.

இந்த சம்பவத்தை மலையாள மனோரமா செய்தி இதழில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த பிரச்சனைத் தொடர்பாக கடந்த சில நாட்களாக மவுனம் காத்துவந்த மோகன்லால், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை - நடிகர் மோகன்லால்
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை - நடிகர் மோகன்லால்

அதில், ” நான் எங்கும் தலைமறைவாகவில்லை ... சினிமா சமூகத்தின் ஒரு அங்கம். இவை எல்லாத்துறைகளிலும் நடக்கின்றன, அதையெல்லாம் நான் ஊக்குவிப்பதில்லை. இதற்குமுன் இரண்டு முறை ஹேமா கமிட்டி முன் ஆஜராகினேன்.

என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக நான் குஜராத், பம்பாய் சென்னை ஆகிய இடங்களில் இருந்தேன். மோசமான கேள்விகளைக்கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள். என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியது அம்மா அல்ல... அம்மா குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு இல்லை.” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com