சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வாசித்த மாணவர்|மைக்கை பிடுங்கிய பள்ளிமுதல்வர்.. ம.பியில் வெடித்த போராட்டம்

மத்தியப் பிரதேச பள்ளியொன்றில், சமஸ்கிருதத்தில் பகவத் கீதை வரிகளை வாசித்ததற்காக மாணவரிடம் மைக்கைப் பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
model image
model imagefreepik
Published on

மத்தியப் பிரதேசம் குணா பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிக்கு சொந்தமாக தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக கேத்தரின் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது பள்ளி மாணவர் ஒருவர் ஆங்கிலத்தில் Poem சொல்வதற்குப் பதில் சமஸ்கிருத மொழியில் பகவத்கீதையைக் கூறியுள்ளார்.

model image
model imagefreepik

இதனால் கோபமுற்ற அப்பள்ளி முதல்வர் கேத்தரின் உடனடியாக மாணவரிடம் இருந்து மைக்கை பிடுங்கி உள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் பள்ளிக்கு எதிராக போராட்டம் வெடித்தது.

”பள்ளி முதல்வர் கேத்தரின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டார். அவர்மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம்” என ஏபிவிபி எனும் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: குஜராத்| 88 வீடுகள்.. 700 மக்கள்.. போலி ஆவணம் மூலம் ஒரு கிராமத்தையே விற்ற 6 பேர்.. நடந்தது என்ன?

model image
பள்ளிகளில் பகவத் கீதை கட்டாயம்: மசோதா நிறைவேற்ற முயற்சி

இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீசார் ஏபிவிபியை சேர்ந்தவர்களை சமாதானம் செய்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வதாக பிடிவாதமாக கூறியதோடு, பள்ளி முதல்வர் கேத்தரினுக்கு எதிராக போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கோத்வாலி நகர போலீசார் பள்ளி முதல்வர் கேத்தரின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மான்சிங் தாகூர்
மான்சிங் தாகூர்ani

அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதுபற்றி குணா பகுதியின் துணை சூப்பிரண்டு மான்சிங் தாகூர், ”மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளி முதல்வருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்கா | செய்யாத குற்றத்துக்காக 43 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்.. உண்மை வெளிவந்தது எப்படி?

model image
பகவத் கீதையை விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக் கழகம் முடிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com