ஜார்க்கண்டில் பள்ளி முதல்வரும், பியூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் ஒருவரையொருவர் பிரம்பால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கருணா சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இப்பள்ளியில் பியூனாக வேலை செய்து வரும் ஹிமான்ஷு திவாரி நேற்று முன்தினம் தாமதமாக பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தலைமை ஆசிரியர் கருணா சங்கர், ஹிமான்ஷுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த பிரம்புகளை எடுத்து ஒருவரையொருவர் கடுமையாக அடித்துக் கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இதனிடையே, இந்த சம்பவத்தை மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/tTs_wU6ry-8" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
சோர்ஸ்: நியூஸ் 18 வைரல்