மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை
Published on

மகாத்மா காந்தியின் 1‌50 வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ‌மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மகாத்‌மாவின் நினைவிடத்தி‌ல் மரியாதை செலுத்தினர். தேசப்பிதாவின் புகழைப் பறைசாற்றும் வகையி‌ல் கலைஞர்கள் பஜனைப் பாடல்களை பாடினர். இதைத் தொடர்ந்து குஜராத் செல்லும் பிரதமர், அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். 

இதைத் தொடர்ந்து நாட்டை திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றதாக அவர் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com