971 கோடியில் புதிய நாடாளுமன்றம்.. டிச. 10இல் அடிக்கல் நாட்டுவிழா - 2022இல் திறக்க வாய்ப்பு

971 கோடியில் புதிய நாடாளுமன்றம்.. டிச. 10இல் அடிக்கல் நாட்டுவிழா - 2022இல் திறக்க வாய்ப்பு
971 கோடியில் புதிய நாடாளுமன்றம்.. டிச. 10இல் அடிக்கல் நாட்டுவிழா - 2022இல் திறக்க வாய்ப்பு
Published on

“வரும் 10 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைக்க உள்ளார். உத்தேசமாக 2022 இல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் அவை கூட்டம் நடைபெறும்” என மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

சுமார் 2000 பேர் நேரடியாகவும், 9000 பேர் மறைமுகமாகவும் இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை அப்படியே அச்செடுத்ததை போல புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. சுமார் 64500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிக்கு 971 கோடி ரூபாய் செலவாகலாம் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தை தாங்க கூடிய வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.

அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்ட மேல் தளம் புதிய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ளது. அதே போல உறுப்பினர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு அதிகளவிலான உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அவை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இட வசதியோடு கட்டப்பட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் முழுவதும் உள்ளூர் தொழிலாளர்களை கொண்டே இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காகித பயன்பாடு இன்றி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையோடு நாடாளுமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம், உறுப்பினர்கள் அமர்ந்து பேசுவதற்கான் இட வசதி, நெருக்கடி இல்லாத பார்க்கிங் வசதிகளும் புதிய கட்டிடத்தில் ஏற்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் பழைய நாடாளுமன்ற கட்டிடம் இதர அலுவல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கட்டுமான பனியின் போது காற்று மாசு மற்றும் ஒலி மாசையும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com