குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி காஷ்மீருக்கு சென்ற பிரதமர் மோடி, தோடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் .
வெளிநாட்டு சக்திகளாலும், குடும்ப அரசியலாலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சீரழிந்துவிட்டது. ஆட்சியாளர்களுக்கு ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களின் குழந்தைகள் மீது அக்கறை இல்லை. காஷ்மீர் மாநில இளைஞர்கள் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்குள்ள குடும்ப கட்சிகள் அவர்களை தவறாக வழிநடத்துகிறது. பாதுகாப்பான, வளர்ச்சி மிகுந்த காஷ்மீரை உருவாக்குவதே காஷ்மீர் மக்களுக்கு எனது வாக்குறுதி.” என பிரதமர் மோடி பேசினார்.