தொழில்நுட்பத்துறையில் நாடு சுயசார்பு நிலையை எட்டுவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இணையதள கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர், தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் தந்து வருவதாக கூறினார். கடந்த மத்திய பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், ட்ரோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்து வரவுள்ள 5ஜி தொழில்நுட்பம், வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தாண்டு 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும் வரும் நிதியாண்டில் நாடு முழுவதும் 5ஜி தொலைபேசி சேவை வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
தொலைத்தொடர்பு துறையில் சர்வர்கள் இந்தியாவில் இருப்பது அவசியம் என்றும், இதன்மூலம் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறைவதுடன் பாதுகாப்பு ரீதியிலும் இது தற்போது முக்கியத்துவம் பெறுவதாகவும் பிரதமர் விளக்கினார்.