வாரணாசி | 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிமுகநூல்
Published on

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தனது சொந்த தொகுதியான வாரணாசியில், பொதுமக்கள் கண் மருத்துவ சிகிச்சை பெற வசதியாக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண் மருத்துவமனையை, பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

அதோடு, விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், விமான நிலையத்திற்கான புதிய முனைய கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி
ராகுல் காந்தி குறித்து சர்ச்சை பதிவு.. ஒடிசா நடிகர் மீது போலீஸில் புகார்!

அதோடு, 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள வாரணாசி விளையாட்டு மைதானத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத்தை திறந்து வைக்க இருக்கிறார். தொடர்ந்து, மாணவர்களுக்கான தங்கும் விடுதி, வடிகால் வசதி, சுற்றுலா சார்ந்த திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com