நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு
Published on

கோவிட்-19 தொற்று நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்துவரும் சூழலில், ஒவ்வொரு ஆலையின் முழுதிறனுக்கும் ஏற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பினை உறுதி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சுகாதார அமைச்சகம், டிபிஐஐடி, இரும்பு, சாலை மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சகங்களின் ஆலோசனையும் பெறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த ஆய்வுக்கு பின்னர், ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்களின் முழுநேர இயக்கத்தை உறுதிசெய்யவேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

மேலும் சிலிண்டர் நிரப்பும் ஆலைகளுக்கு தேவையான பாதுகாப்புடன் 24 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படும். தொழில்துறை சிலிண்டர்களை மருத்துவ ஆக்ஸிஜனுக்கு உரிய தூய்மைப்படுத்தலுக்குப் பிறகு அனுமதிக்கப்படும் . நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்கள் தானாகவே ஆக்ஸிஜன் டேங்கர்களாக மாற்ற அனுமதிக்கப்படும். மருத்துவ தர ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆராயப்படும் எனவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வைரஸ் எதிர்ப்பு மருந்து ரெம்டெசிவிர் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை பல மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com