ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2019ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டத்தின் 73ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் உமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது, யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.