குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் மிலாது நபி வாழ்த்து

குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் மிலாது நபி வாழ்த்து
குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் மிலாது நபி வாழ்த்து
Published on

மிலாது நபியை ஒட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நபி பெருமான் பிறந்த தினத்தில் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் மிலாது நபி பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மிலாது நபி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய நாட்டில் பன்முகத்தன்மையை போற்றிட மிலாது நபி நாளில் சபதம் ஏற்போம் என்று கூறியுள்ளார். டிடிவி தினகரன், மிலாது நபி பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com