இந்தி பேசும் மக்கள் பிற மொழி பேசுபவர்களுக்கு மேலும் மதிப்பளிக்கவேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக பிற மொழியினர் கருதுகின்றனர். தமிழகத்திலும், கர்நாடகாவிலும் இந்திக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.
பிற மொழிகளையும், கலாச்சாரங்களையும் உள்வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை அதிகரிக்க முடியும். இந்தி மொழியை இதே திசையில் முன்னெடுத்துச் சென்றால், இந்தி மொழி வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
பல தொழில்நுட்ப பாடங்கள் இந்தியில் நடத்தப்படுவது எனக்கு பெருமையாக உள்ளது. பள்ளிக் கல்வியில் தொடர்ந்து இந்தி மொழி இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும் என்று குடியரசுத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.