ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் அன்றே நிறைவேற்றப்பட்டது. நேற்று மக்களவையில் கடும் விவாதங்களுக்குப் பின் அதே மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது. மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையில், திருத்தி அமைக்கப்பட்ட 370 ஆவது சட்டப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவுகள் எதன் அடிப்படையில் நீக்கப்பட்டது என்பதையும் அதில் தெளிபடுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த அரசாணை நடைமுறைக்கு வந்துள்ளது.