பிரபுதேவா, மோகன்லால் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: குடியரசு தலைவர் வழங்கினார்

பிரபுதேவா, மோகன்லால் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: குடியரசு தலைவர் வழங்கினார்
பிரபுதேவா, மோகன்லால் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருது: குடியரசு தலைவர் வழங்கினார்
Published on

நடிகர்கள் மோகன்லால், பிரபுதேவா உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இந்த வருடம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 56 பேருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வழங்கப்பட்டன.

திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா, பங்காரு அடிகளார், டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மகாதேவன், செஸ் வீராங்கனை ஹரிகா, இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர், வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர், அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்தேவ் சிங் உட்பட 56 பேர், குடியரசுத் தலைவரிடம் பத்ம விருதுகளை பெற்றனர்.

விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மற்றவர்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com