குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதால், அவருக்குப் பதிலாக புதிய குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுக்க, திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர்.
நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். இதில் 99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. முதலில் பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. மாலை 5 மணி அளவில் முடிவு அறிவிக்கப்படும். இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார் என்பது மாலையில் தெரிந்துவிடும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அவர் புதிய குடியரசு தலைவராகிறார்.