குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டன் சென்றடைந்திருக்கிறார். நாளை நடைபெறும் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்.
குடியரசுத் தலைவரின் விமானம் நேற்றிரவு சுமார் 8:50 மணிக்கு லண்டன் கேட்விக் விமானநிலையத்தை சென்றடைந்தது. குடியரசுத் தலைவருடன் வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவட்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். இன்று அவர் ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இரங்கல் குறிப்பு புத்தகத்தில் இந்திய அரசின் சார்பில் கையெழுத்திடுகிறார்.
பின்னர் அவர் வெளிநாட்டுத் தலைவர்களுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார். நாளை லண்டனில் அந்த ஊர் நேரப்படி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிலும் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பார். மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டன் சென்றடைந்துள்ளார்.