நாட்டின வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பாடுபட்டவர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதிலும், நாட்டிலேயே மிக உயரிய விருதாக கருதப்படுகிறது பாரத ரத்னா விருது.
அவ்விருதினை வழங்கும் விழாவானது புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில், இன்று (30.3.2024) நடைபெற்றுள்ளது. அதுவும் ஒரே நாளில் 5 விருதாளர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இவ்விருதினை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எல்.கே அத்வானி
நரசிம்ம ராவ்
சரண் சிங்
எம்.எஸ்.சுவாமிநாதன்
கற்பூரி தாகூர்
ஆகியோர்.
இவர்களில் எல்.கே.அத்வானியை தவிர மீதமுள்ள நாள்வரும் மறைந்த தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே அத்வானி இவ்விருதினை அவரே நேரில் வந்து பெற்று கொண்டார்.
மறைந்த முன்னாள் பிரதமர் பதவி வகித்த நரசிம்ம ராவ் சார்பில் அவரது மகன் பி.பி. பிராபாகர் ராவ் விருதை பெற்றுக் கொண்டார்.
மறைந்த முன்னாள் பிரதமர் பதவி வகித்த சௌத்ரி சரண் சிங் சார்பில் அவரது பேரன் ஜெயந்த் சௌத்ரி விருதை பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டினை சேர்ந்த பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம் எஸ் சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் நித்யா ராவ் விருதை பெற்றுக்கொண்டார். எம்.எஸ்.சுவாமிநாதன், கடந்த ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமான கர்பூரி தாகூர் சார்பில் அவரது மகன் ராம் நாத் தாக்கூர் விருதை பெற்றுக்கொண்டார்