பட்ஜெட் கூட்டத்தொடர்: மத்திய பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 2024 ஆண்டுக்கான முதல் இடைகால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய ஜனதிபதி திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்றதில் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைபுதிய தலைமுறை
Published on

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 2024 ஆண்டுக்கான முதல் இடைகால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

இதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து குதிரை படைசூழ புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சாரட் வாகனத்தில் வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். செங்கோல் ஏந்தியவாறு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து “நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முதன் முறையாக உரையாற்றுகிறேன்” என தனது உரையை தொடங்கிய அவர், பேசியதை விரிவாக பார்க்கலாம்...

Parliment
Parlimentfile

“ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. நாட்டில் அந்நிய முதலீடு அதிகரிப்பதால் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
முழு பட்ஜெட் Vs இடைக்கால பட்ஜெட் - வேறுபாடுகள் என்னென்ன?

சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. விண்வெளி திட்டங்களில் உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறிவருகிறது. மேட் இன் இந்தியா என்பது தற்போது உலக பிராண்ட் ஆக மாறியிருக்கிறது. இந்திய ரயில்வே விரைவில் முழுமையாக மின்மயமாக்கப்படும். தாய் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

pm modi
pm modifile

அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 5 நாட்களில் 13 லட்சம் பேர் பர்வையிட்டுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத ஆதரவை அரசு வழங்கி வருகிறது. ஜி20 மாநாட்டை இந்தியா நடத்திய விதம் உலகின் பாராட்டை பெற்றது. கொரோனா பேரிடர் பாதிப்பிலிருந்து இந்தியா வெற்றிகரமான மீண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
நெருங்கும் தேர்தல்.. எதிர்பார்ப்பில் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்: கவனம் ஈர்க்கும் 6 துறைகள்!

ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி மக்களுக்கு தூய்மையான குழாய் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினர் கிராமங்களுக்கு 4ஜி தொலைத் தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியும் இரட்டிப்பாகியுள்ளது” என்று கூறினார்.

இத்தோடு 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய பாஜக அரசின் சாதனைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டியலிட்டு பேசினார். கீழ்க்காணும் வீடியோ இணைப்பில் அவற்றையும் விரிவாக காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com