செவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர் 

செவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர் 
செவிலியர்களோடு ரக்ஷாபந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர் 
Published on

சகோதர பந்தத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களின் கையில் 'ராக்கி' கட்டுவது வழக்கம். இந்தியா முழுவதும் இன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ பிரிவின் செவிலியர்கள் மற்றும் குடியரசு மாளிகையின் தோட்டத்தில் உள்ள மருத்துவமனையின் செவிலியர்களோடு ரக்ஷாபந்தனைக் கொண்டாடினார். 

‘கொரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்கள் இரட்சகர்களாக முன்னின்று மக்களை  காக்கின்றனர்’  என செவிலியர்களை பாராட்டினார் குடியரசு தலைவர். பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் குடியரசு தலைவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com