இந்தியாவில் கொரோனா முதல் அலையை ஒப்பிடும்போது இரண்டாம் அலையில் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அலையின்போது 387 கர்ப்பிணிகளில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக அதாவது சுமார் 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல் அலையில் ஆயிரத்து 143 கர்ப்பிணிகளில் 162 பேருக்கு மட்டுமே அதாவது 14.2 விழுக்காட்டினருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாம் அலையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களின் விகிதமும் சற்று அதிகரித்துள்ளது. முதல் அலையின்போது 0.7 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், இரண்டாவது அலையில் 5.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு அலைகளிலும் கிட்டத்தட்ட 1,530 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.