சோனோகிராபி சென்டரில் தவறான ரிப்போர்ட் வழங்கியதால் சிகிச்சையில் குளறுபடி நடந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்யாணில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை செய்து வந்தார். அப்போது மருத்துவரின் பரிந்துரைபடி அங்குள்ள ஒரு சோனோகிராபி சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளார். அந்த ஸ்கேன் ஆய்வு முடிவில், 'குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லை' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்துள்ளனர். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்ட அந்த கர்ப்பிணிப் பெண் பக்கவிளைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சோனோகிராபி சென்டரில் தவறான ரிப்போர்ட் வழங்கியதால் சிகிச்சையில் குளறுபடி நடந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார் என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ரிப்போர்ட்டை தவறாக தயார் செய்து கொடுத்த மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக கொங்கான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சோனோகிராபி மையத்தை நடத்தி வரும் மருத்துவர் மீது பிரிவு 304 (ஏ) (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: கணவர் மரணம் குறித்து மாறிமாறி உளறிய மனைவி.. விசாரணையில் அம்பலமான திட்டமிட்ட கொலை!