“மேற்கு வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது; தாண்டினால்...” - பிரசாந்த் கிஷோர் சவால்

“மேற்கு வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது; தாண்டினால்...” - பிரசாந்த் கிஷோர் சவால்
“மேற்கு வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது; தாண்டினால்...” - பிரசாந்த் கிஷோர் சவால்
Published on

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது என திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இதைப் பிடிப்பதற்கு பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள், எம்.பி என பாஜக பக்கம் இணைந்து வருகின்றனர். கட்சித் தாவிய எம்.எல்.ஏ.க்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் சுபேந்து அதிகாரியும் ஒருவர். இவர் ஒரு காலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற்று வருகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. பிரசாந்த் கிஷோரின் வருகைக்கு பிறகே திரிணாமுல் காங்கிரஸில் பல தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டாது என திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal

PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை கடப்பது சாத்தியமே இல்லை. இந்த ட்விட்டை சேமித்து வையுங்கள். பாஜக இரட்டை இலக்கத்தை கடந்தால் ட்விட்டரை விட்டே விலகுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com