“இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி”- பிரஷாந்த் கிஷோர்

“இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி”- பிரஷாந்த் கிஷோர்
“இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி”- பிரஷாந்த் கிஷோர்
Published on

இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு டெல்லி மக்களுக்கு நன்றி என ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்த‌ல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது.

கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 56 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 14 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில் அதனை விட அதிகமாகவே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இதனிடையே சீலாம்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு டெல்லி மக்களுக்கு நன்றி என ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் 3-ஆம் முறையாக ஆட்சியை பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தது பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com