முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமாவில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 10ஆம் தேதி, டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் இருந்த ரத்தக்கட்டி ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என்று வந்த நிலையில் நுரையீரல் தொற்றுநோயும் உருவாகி, இப்போது அதற்காக சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் "பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரின் சிறுநீரக செயல்பாடுகள் நேற்று சற்றே குறைந்தது. அவர் தொடர்ந்து கோமா நிலையில் இருக்கிறார். வெண்ட்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளது.