காங்கிரஸ்-க்கு சாதகமான பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு - 44,000 வாக்கு வித்தியாசத்தில் பிரஜ்வல் பின்னடைவு!

காங்கிரஸின் ஷ்ரேயாஸ் படேல், பிரஜ்வல் ரேவண்ணாவைவிட சுமார் 44,000 வாக்குகள் (4 மணி நிலவரப்படி) வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதனால் பிரஜ்வலின் தோல்வி உறுதியாகிவிட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா pt web
Published on

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது முதல் வெற்றியைப் பதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான எச்.டி.தேவே கவுடாவின் பேரனும், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட சிட்டிங் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவைவிட சுமார் 44,000 வாக்குகள் (4 மணி நிலவரப்படி) வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதனால் பிரஜ்வலின் தோல்வி உறுதியாகிவிட்டது.

ஷ்ரேயாஸ் படேல் - பிரஜ்வல் ரேவண்ணா
ஷ்ரேயாஸ் படேல் - பிரஜ்வல் ரேவண்ணா

சென்ற மாதம் நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்படிருந்த ஹசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேலை எதிர்த்து வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாஜக-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்களவைத் தேர்தலின் முக்கியக் கட்டமான இரண்டாம் கட்டத்தை நோக்கிச் செல்லும் நேரத்தில் ஹசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரஜ்வல் ரேவண்ணா
நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா!

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பிரஜ்வலின் பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் வெளியானது அத்தொகுதியின் வாக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணாட்விட்டர்

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் 3 மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com