தமிழகத்தில் தொழிற்சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளதாக தேசிய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், காவிரி, பவானி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா நதி ஆகியன மாசடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கழிவுகள் கலப்பு, தொழிற்சாலைக் கழிவுகளால் ஆறுகள் வேகமாக மாசடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் நாடு முழுவதும் 275 ஆறுகள் மாசடைந்துள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் முக்கிய நதிகள் மாசடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழகத்தின் இந்த 7 நதிகள் தான் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை உள்ளிட்டவைகளுக்கு முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.