மேற்குவங்கத்தில் 45 தொகுதிகளுக்கு 5-ஆவது கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 45 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
4-ஆம் கட்ட தேர்தலின் போது, ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் பலப்படுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு படையின் 853 கம்பெனிககள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேற்கு வங்க அரசியல் கட்சியினருடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, எஞ்சியுள்ள தேர்தல்களை ஒரேகட்டமாக நடத்துவதற்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.