அரசியல் வாரிசு To எதிர்க்கட்சி தலைவர் - ராகுல் காந்தி கடந்து வந்த பாதை!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்...
ராகுல் காந்தி
ராகுல் காந்திpt web
Published on

இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தின் தற்போதைய வாரிசாக பார்க்கப்படுபவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் தந்தை, பாட்டி, அவரது தந்தை என 3 தலைமுறையினர் நாட்டின் உயர் பதவியை அலங்கரித்துள்ளனர். அதே நேரம் பாட்டி, தந்தை இருவரையும் பயங்கரவாதத்திற்கு பறிகொடுத்தது இவரது துரதிர்ஷ்டம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்திpt web

ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் போன்ற உலகின் பிரபல கல்வி நிறுவனங்களில் பயின்ற ராகுல் அதன் பின் சில ஆண்டுகள் மும்பையில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் நடத்தினார் என்பது பலரும் அறியாத தகவல். 2004ஆம் ஆண்டில் ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் நடந்தது. அந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ராகுல் காந்தி. அப்போது அவருக்கு வயது 34 மட்டுமே.

ராகுல் காந்தி
“அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு...” - ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

2007ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆன ராகுல் 2008இல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்து 2016இல் கட்சியின் துணைத் தலைவர் ஆன அவர் 2017இல் தலைவர் ஆகவும் உயர்ந்தார். இதையடுத்து நடந்த 3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது.

2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை தலைமையில் களம் கண்டது காங்கிரஸ். இதில் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. தான் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் வென்றாலும் அமேட்டி தொகுதியில் தோல்வியுற்றார் ராகுல்.

இத்தோல்விகளுக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல். பிரதமர் மோடி குறித்த விமர்சிக்கும் போது ஒரு சாதியை அவமதித்த புகாரில் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றின் காரணமாக அப்பதவியை தற்காலிகமாக மீண்டும் பெற்றார். கடந்த 2 ஆண்டுகளில் ராகுல் காந்தி நாடெங்கும் 2 கட்டங்களாக தெற்கு வடக்கு மற்றும் கிழக்கு மேற்காக நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி
நாயகன்: இளவரசர் To இளைஞர்களின் நம்பிக்கை... ராகுல் கடந்து வந்த பாதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com