கர்நாடகாவில் 2-வது பெரிய சமூகமான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். மாணவ பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்த இவர், தற்போது மூத்த தலைவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
* 1989ம் ஆண்டு முதல் சாந்தனூர், கனகபுரா தொகுதிகளில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார்.
* கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பதவியில் இருந்தபோது, 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டி.கே.சிவகுமார், அப்போதே கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
டி கே சிவகுமார், கர்நாடகா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் நெருக்கடி காலத்தில் கட்சிக்காக உதவி உள்ளார்.
* 2020-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் பலம் கொண்ட கட்சியாக மாற்ற டி.கே.சிவகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
மேலும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டார். மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி காங்கிரஸின் செல்வாக்கை மீட்டெடுத்தார்.
2023 நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெல்ல, இவரின் பங்கு மிக முக்கியமானது. இந்நிலையில்தான் தற்போது இவர் முதல்வர் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார்!