பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய பேஸ்புக் ’தொழிலதிபரை’ போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு குஜராத்தைச் சேர்ந்த ’தொழிலதிபர்’ ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமானார். இருவரும் சாட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் ஃபோன் நம்பர்களை பரிமாறிக்கொண்டனர். இதையத்து வாட்ஸ் ஆப்பிலும் தொடர்ந்தது நட்பு. சிறது நாட்களுக்குப் பிறகு தொழிலதிபரின் ’நோக்கம்’ தெரிந்ததும் நட்பைத் துண்டித்தார் பெண்.
இதற்கிடையே அந்த தொழிலதிபர், ‘நான் மும்பை வருகிறேன், ஒரு கப் காபி குடித்துவிட்டு பிரிந்துவிடலாம்’ எனச் சொன்னார். இந்த ஐஸ்சை நிஜம் என நம்பிய அந்த அப்பாவி பெண், தொழிலதிபர் அழைத்த ஸ்டார் ஓட்டலுக்குச் சென்றார். காபி குடித்தார். பிறகு அரை மயக்கமானார். எழுந்து பார்த்தால், அந்த நட்சத்திர ஓட்டல் அறை ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இங்க எப்ப வந்தோம் என அவர் யோசித்தபோதுதான் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. இதுபற்றி கணவரிடம் கண்ணீர் மல்க சொன்னார் அந்தப் பெண். இரண்டு பேரும் சேர்ந்து போலீசில் புகார் செய்தனர். அந்த பேஸ்புக் தொழிலதிபரின் ஃபோன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.