எப்போதும்போல கடந்த புதன்கிழமை அன்று இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் கூடூர் கிராமத்தை சேர்ந்த காவலர்கள் சிவக்குமார் மற்றும் ஷ்யாம்.
அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அவசர எண்ணான 100க்கு ‘70 வயது பாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து விட்டதால் காப்பாற்ற வருமாறு’ உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சிவக்குமார் மற்றும் ஷ்யாம் விரைந்துள்ளனர். அப்போது அந்த பகுதி வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்பட்டது. எல்லோரும் கிணற்றை சுற்றி நின்று கொண்டிருக்க சிவக்குமார் நொடி பொழுது கூட யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்து பாட்டியை காப்பாற்றியுள்ளார்.
‘பாட்டியை காப்பாற்ற வேண்டுமெனபது மட்டும்தான் எனது யோசனையாக இருந்து. அதனால் கிணற்றில் குதித்து அவரை நீரில் மூழ்காதபடி பார்த்துக் கொண்டேன்’ என தெரிவித்துள்ளார் சிவக்குமார்.
அவரது வீர தீர செயலை எல்லோரும் பாராட்டி பேசி வருகின்றனர்.