ராகுல் காந்தி குறித்து சர்ச்சை பதிவு.. ஒடிசா நடிகர் மீது போலீஸில் புகார்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புத்ததித்யா மொகந்தி, ராகுல் காந்தி
புத்ததித்யா மொகந்தி, ராகுல் காந்திஎக்ஸ் தளம்
Published on

மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து அக்கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது பல வழக்குகள் உள்ளன. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதையடுத்து அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபா சித்திக்
பாபா சித்திக்pt web

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஒடிஷா நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) போலீசில் புகார் அளித்துள்ளது.

’பாபா சித்திக் கொல்லப்பட்ட பிறகு, கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியாக இருக்க வேண்டும்’ என்று ஒடிஷா நடிகர் புத்ததித்யா மொகந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படிக்க: ”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!

புத்ததித்யா மொகந்தி, ராகுல் காந்தி
”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

இதையடுத்து, நடிகர் புத்ததித்யா மொகந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி மாநில NSUI தலைவர் உதித் பிரதான் போலீஸில் புகார் அளித்துள்ளார். “எங்கள் தலைவருக்கு எதிராக இதுபோன்ற கருத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்திருக்கும் பிரதான், மொகந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். புகாரைப் பெற்றுள்ள போலீஸார் அவர்மீது விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

Rahul gandhi
Rahul gandhipt desk

இதற்கிடையே, மொகந்தி சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை தன்னுடைய வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஒரேநாளில் 11.. ஒரு வாரத்தில் 50.. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களால் பாதிக்கப்படும் விமானங்கள்!

புத்ததித்யா மொகந்தி, ராகுல் காந்தி
”லிஸ்டில் இவர் பெயரும் இருக்கு”| பாபா சித்திக் படுகொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com