பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணிக்காக செல்லும் விவசாயிகளின் மீது காவல் துறையினரின் நடவடிக்கை கடுமையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவ எல்லையில் காயமடைந்த விவசாயிகள் கூறுவது என்ன?
விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நிலையில் பஞ்சாப் ஹரியானா மாவட்ட எல்லையில் இருக்கும் ஷம்பு பகுதியில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்த இடத்தில் தான் ஹரியானா காவல் துறையினர் விவசாயிகளுக்கு எதிராக கடுமையாக நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், “டெல்லி செல்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். 12ம் தேதி இங்கு வந்தோம். எங்கள் கோரிக்கைக்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறோம். ஆனால் அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குகின்றனர். அதில் தப்பிக்கும் போது காலில் அடிபட்டது. மற்றொரு இடத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். வேறொரு இடத்தில் விவசாயிகளின் கால்கள் உடைந்தது” என்றார்.