இந்நிலையில் தின்ஹட்டா பகுதிக்கு ஆளுநர் பார்வையிட சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஆளுநர் ஜக்தீப் தங்கர் கூறும்போது, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மக்களை போலீஸாரே மிரட்டுகின்றனர். என்னை துப்பாக்கியால் சுட்டாலும் மார்பில் குண்டை தாங்குவேன். ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிகிறது. முதல்வர் மம்தாவின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நந்திகிராம் பகுதிக்கு ஆளுநர் ஜக்தீப் தங்கர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார்.