இந்தியாவில் ஆன்லைன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் POCO பிரண்ட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கவுண்டர்பார்ட் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட நவம்பர் மாத அறிக்கையின் அடிப்படையில் POCO போன்களுக்கு இந்தியாவில் டிமெண்ட் எகிறி இருப்பதாக தெரிகிறது. ஒன் பிளஸ் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன் பிராண்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு POCO முன்னேறியுள்ளது.
குறிப்பாக POCO-வின் M2 மற்றும் C3 மாடல்தான் ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக விற்பனையான டாப் 3 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் XIAOMI நிறுவனத்தின் துணை நிறுவனமான POCO கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் தனியாக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கி இந்த உயரத்தை எட்டியுள்ளது.
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான போன்களை விற்பனை செய்துள்ளதாக POCO நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 2021 இல் POCO அடுத்த கட்டத்திற்கு நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் XIAOMI மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன.