ஆத்தாடி! இவ்வளவு நிறுவனங்களில் பங்குதாரரா நிரவ் மோடி?
நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் நடந்த ரூ.11,500 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டார். நிரவ் மோடி தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பி விட்டார். இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் உள்ள நிரவ் மோடி நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர்.
இதனிடையே, நிரவ் மோடிக்கு வங்கியில் கடன் வழங்கப்பட்டது எப்படி, பின் புலத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. வங்கி அதிகாரிகள் மீது அரசியல்வாதிகளும், மாறிமாறி அரசியல்வாதிகள் மீது வங்கிக் கூட்டமைப்பு சங்கங்களும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் பங்குதாரர்களாக மற்றும் முக்கிய பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சுமார் 90 நிறுவனங்களில் நிரவ் மோடி அவரது மாமா சோக்ஷி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவனங்களில் தனது கறுப்பு பணத்தை கடந்த 20 ஆண்டுகளாக நிரவ் மோடி முதலீடு செய்து வந்தாரா என சந்தேகிக்கப்படுகிறது.
இதில் நிறைய நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளில்தான் நிரவ் மோடி மற்றும் அவரது மாமா சோக்ஷி வெளியேறியுள்ளனர். சில நிறுவனங்களில் இருந்து 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில்தான் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களாக இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியானது ரூ.11,400 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் நிரவ் மோடிக்கு எல்.ஓ.யு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதாவது அவரது நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் கீழ் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் எம்.டி மற்றும் சி.இ.ஓ. சுனில் மேத்தா, “இந்த மோசடியானது 2010ம் ஆண்டே தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஜனவரி 25ம் தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.
நிறுவனங்களின் விவரம் பின்வருமாறு:-