உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி நிறுவனத்தின் (IL&FS) தமிழக வங்கிக் கணக்கில் ரூ,2,060 கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.
இந்திய அரசின் நிதியுதவில் இயங்கி வரும் ஐ.எல்.&எப்.எஸ். நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கில் கடன் பெற்றிருந்தது. ஆனால், அந்தக் கடனை அந்நிறுவனம் உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நிலவரப்படி, அந்த நிறுவனத்தின் கடன் தொகை சுமார் ரூ.94,000 கோடியாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் சிறிது சிறிதாக கடன் நிலுவையை ஐ.எல்.&எப்.எஸ். நிறுவனம் செலுத்தி வந்துள்ளது. எனினும், அந்த நிறுவனத்தின் தமிழக கணக்கு சார்பில் பெறப்பட்டிருந்த ரூ.2,060.14 கோடி கடன் தொகை பல மாதங்களாகியும் செலுத்தவில்லை.
இதையடுத்து, அந்நிறுவனம் மேற்குறிப்பிட்ட தொகையை மோசடி செய்ததாக ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று புகார் அளித்துள்ளது.